புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

சனி, 27 நவம்பர், 2010

கண்தானம்


பட்டுப்பூச்சிகளை அழித்து

ஆடையாக உடுத்தினோம்

மாடுகளை அழித்து

செருப்புகளாக கால்களில் போட்டோம்

மனிதா! உன்னை அழித்தால்

என்ன? தர முடியும்

முடியும் உன்னில் இருக்கும்

கண்களை தர முடியும்

நீ! மண்ணுக்குள் செல்லும் போது

பிறர்க்கு பயன்படாமல் மண்ணுக்குள்-செல்கின்றாய்

மண்ணுக்குள் செல்லாதே நீ!

மறுபடியும் இவ்வுலகில் வாழ

உனக்கு ஓர் சந்தர்ப்பம்

தானம் செய்திடுவீர்

கண்களை மண்ணுக்குள் செல்லும் முன்!.......






ஓவியம்


வார்த்தைகளில்லாத பேச்சு

கண்களால் மட்டும் பேசும்

விழிகளால் மட்டுமே உணர முடியும்!

பல வார்த்தைகளை ஒன்று

சேர்த்தாலும் புரியாத ஒன்றை

ஓவியம் புரிய வைத்து விடும்!

கைவன்மைக்கு ஏற்ற பரிசு

ஓசை இல்லாத பாட்டு -சித்திரம் .

ஞாயிறு, 21 நவம்பர், 2010

மலர்


மலரைப் பார்!

அதன் காட்சி எவ்வளவு அழகானது !

அதை காண கோடி கண்கள் வேண்டும் !

மலர்கள் எவ்வளவு

அற்புதமானது !

நறுமணத்தையும் தேனையும்

இலவசமாகத் தருகிறது !

தன் பணி முடித்ததும்

ஓசை இல்லாமல் பட்டு போகிறது !

மலரைப் போல இரு !

வெற்றி


வெற்றி எனும் படிக்கட்டுனை

அடைய போராடு !

தோல்விகளை கண்டு பயந்து விடதே

உழைப்பின் தத்துவம் தான் வெற்றி!

தோல்விதான் வெற்றிக்கு படிக்கட்டு

தோல்வியை தகர்த்து

வெற்றியை அடைய பாடுபடு !

வெள்ளி, 5 நவம்பர், 2010

குயில்


பெண்ணை விட

நீ தான் அழகு

அவள் பாடும் பாட்டு

அவளுக்கு அழகு

ஆனால் எனக்கு நீ தான் அழகு

உன் ஓசை எனது காதுகளுக்கு தேன்னோசை!

உன் அழகு என்னை

மீண்டும் ! மீண்டும் ! பார்க்கத் தூண்டும்

பெண்களுக்கு முக அழகு!

உனக்கு உன் அலகு அழகு