புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

மழைச்சாரல்


நிலங்கள் பல


வறண்டுப் போயின !


மக்கள் பலரும்


உடைமைகள் யாவையும்


தூக்கிக் கொண்டு


நடக்கத் தொடங்கினர்


ஆடு ,மாடுகள் யாவும்


தண்ணீரில்லாமல் சோர்வடைந்தன


குளம்,குட்டைகளில் நீரில்லாமல்


மீன்கள் துடித்துக் கொண்டிருந்தன


தூரத்தில் ஒரு சிறுவன்


மைல்க் கல்லின் மேல்


அமர்ந்து வானத்தை


மேல் நோக்கி வெறிக்க வெறிக்க


பார்த்துக் கொண்டிருந்தான்


வானிலிருந்து சிறுத்துளிநீர்


சிறுவனின் கண்களில் பட்டது


மின்னல்கள் ெவட்டின


இடி சப்தத்துடன் ேகட்டது


ஆனந்தம்!... ஆனந்தம்!...


சிறுவன் முகத்தில்


மழை வந்துவிட்டது


சிறுவன் துள்ளிக் குதித்தான்


சட்ெடன்று மழை நின்றுவிட்டது


ேசாகத்தில் மறுபடியும்


வானத்ைத ேமல்ேநாக்கி


பார்த்தப்படி மைல்க் கல்லின் மேல்


அமர்ந்திருந்தான்


மழைச் சாரல்


மீண்டும் விழாதா


என்ற நம்பிக்ைகயில்!...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக