புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பக்கங்கள்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

முயற்சி

முயற்சித்துப் பார்!
தோல்விக் கூட
உன் முயற்சியில்
வெற்றியாக பூக்கும்!
முயற்சித்துப் பார்!

பாறாங்கல் கூட
உன் முயற்சியில் உருகும்!
முயற்சித்துப் பார்!
நம்பிக்கை கூட
உன் முயற்சியில்
தன்னம்பிக்கை ஆகும்!
முயற்சித்துப் பார்!
சோதனைகள் கூட!
உன் முயற்சியில் சாதனைகளாக மாறும்!
முயற்சித்துப் பார்!
கொலைக்காரனைக் கூட!
உன் முயற்சியில்
கவிஞனாக மாற்றலாம்!
முயற்சித்துப் பார்!

இவ்வுலகைக் கூட
உன் விரல் நுனிக்கு
கொண்டு வரலாம்!
முயற்சி!...
கண்டுபிடிப்புக்கு தேவையான
அற்புத சக்தி!...
தேடலின் புது அனுபவம்!...
தோல்விகளை சாதனைகளாக்கும்
வெற்றியின் புதிய கண்டுபிடிப்பு!
முயற்சித்துப் பார்! முயற்சித்துப் பார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக